நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம் அமெரிக்கா கொண்டாடும் அளவுக்கு என்ன செய்யப்போகிறது?

அமெரிக்க தனியார் நிறுவனத்தின் விண்கலம்பட மூலாதாரம்,INTUITIVE MACHINES
படக்குறிப்பு,
அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை, இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது.

கட்டுரை தகவல்
எழுதியவர்,ஜொனாதன் அமோஸ்
பதவி,அறிவியல் செய்தியாளர்
29 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.

ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ்(Intuitive Machines) நிறுவனம் அதன் ஒடிசியஸ்(Odysseus) ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது.

விண்கலம் தற்காலிகமாக செயலிழந்ததை கண்டுபிடிக்க சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தற்போது எந்த சந்தேகமும் இன்றி எங்களின் உபகரணங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ளது என்பதை எங்களால் உறுதியாச் சொல்ல முடியும். நாங்கள் அவற்றிக்கு தகவல் கொடுக்கிறோம்,” என திட்டத்தின் இயக்குநர் டிம் கிரெய்ன் அறிவித்தார்.

இந்த செய்தியைக் கேட்ட அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து, உற்சாகமடைந்தனர்.

விண்வெளியின் வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல், பொதுவாக, அமெரிக்க விண்வெளித் திட்டத்திற்கும் இந்த வெற்றி முக்கியமானது.D

இன்டுயட்டிவ் மெஷின்ஸ் நிலவின் மேற்பரப்புக்குச் சென்றதன் மூலம், அமெரிக்காவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலவிற்கு செல்லாத குறையை, இன்டுய்டிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது. கடைசியாக, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 1972இல் தங்களின் விண்கலத்தை நிலவில் தரையிறக்கியிருந்தது.

Bbc

Exit mobile version