சக ஊழியரை அவரது இல்லத்திற்குள் சுட்டுக் கொன்றதால் அதிர்ச்சியில் PHI கள்

திங்கட்கிழமை தமது பொருளாளரும் கரந்தெனிய PHI ரொஷான் குமாரவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமையால் தமது தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக PHI சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

“எங்கள் உறுப்பினர்கள் இப்போது தங்கள் கடமைகளைச் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக புகார் கூறியுள்ளனர். எங்களிடம் இருந்த சிறந்த அதிகாரிகளில் ஒருவரை இழந்துவிட்டோம். அவர் பயமோ தயவோ இல்லாமல் தனது கடமைகளை ஆற்றியவர். அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பிஹெச்ஐ ரொஷான் குமாரவின் கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

51 வயதான PHI குமார, எல்பிட்டிய, பதிராஜ மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று காலை 6.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version