எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் திருத்தப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய எரிபொருள் விலையை இம்மாதத்தில் திருத்தம் இன்றி நிலைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இம்மாதம் எவ்வித விலை மாற்றமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் அவற்றின் விலைகளை அதிகரிக்காது.
இதேவேளை, விலைச் சூத்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும், இம்மாதம் லிட்ரோ எரிவாயு ஒன்றின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள விலைகள் இந்த மாதத்திற்கும் செல்லுபடியாகும் என பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் ரூ.4,250க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.1,707க்கும், 2.3 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.795க்கும் வாங்கலாம்.
