தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்பக் கல்வியின் போது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பிரயோகிக்கும் அழுத்தங்கள் நிறுத்தப்பட்டு, அதன் போட்டித்தன்மையைக் குறைப்பதற்குத் தேவையான சூழலை தயார்படுத்துவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்காலத்தில் நடத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.
மாணவர்களை மதிப்பீடு செய்வதற்காக, வகுப்பறைக்கு வெளியே உள்ள நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் வெளிப்படுத்தும் திறன்களை அங்கீகரித்து அவர்களின் நல்ல திறமைகளை மதிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
DM
