கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இவர் நஞ்சு அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 37 வயதுடைய காலி , படகன்வில ,தலகஹஹேன பிரதேசத்தை சேர்ந்த வைத்தியராவார்.
இவரது மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் வீட்டில் தனிமையில் இருந்த போதே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகினறனர்.