எல்பிட்டிய – எபித்தங்கொடை பிரதேசத்தில் ஆற்றில் நீராடிய 14 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கெட்டகன, கனேகொடை பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியாவார்.
இவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் எபித்தங்கொடை ஆற்றில் நீராடிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் தாய் மற்றும் சகோதரி ஆபத்தான நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான டீமேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.