தம்புள்ளை – ஹபரணை வீதியில் மிரிஸ்கொனியாவ பிரதேசத்தில் இன்று (மார்ச் 04) காலை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று குடும்பங்களை ஏற்றிச் சென்ற கார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது.

தம்புள்ளை – ஹபரணை வீதியில் மிரிஸ்கொனியாவ பிரதேசத்தில் இன்று (மார்ச் 04) காலை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று குடும்பங்களை ஏற்றிச் சென்ற கார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றும், தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது காரில் பிரான்ஸ் தம்பதியரும் அவர்களது 12 வயது மகனும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காரின் குழந்தையும் சாரதியும் சிறு காயங்களுக்குள்ளாகி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் பௌத்த பிக்கு ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version