உத்திக பிரேமரத்னவிற்கு பதிலாக SLPP யின் முத்துக்குமாரண பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் எஸ்.சி.முத்துக்குமாரண இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முத்துக்குமாரண சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துகுமாரன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை அவர் நிரப்புகிறார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம், இலங்கை நடிகரும் அரசியல்வாதியுமான உத்திக பிரேமரத்ன இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இளம் தலைவராக மாற்றத்தை உருவாக்கும் நம்பிக்கையில் தான் அரசியல் களத்தில் பிரவேசித்ததாகவும், ஆனால் கடந்த சில வருடங்களாக அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காததால், தனி மனிதனாக தனது பணியை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Exit mobile version