ஹவுத்திக்களால்  தாக்கப்பட்ட கப்பலில் பணியாற்றிய இலங்கையர் ஒருவருக்கும் காயம்!

ஹவுத்திக்களால் தாக்கப்பட்ட கப்பலில் பணியாற்றிய இலங்கையர் ஒருவருக்கும் காயம்!
ஹவுத்திக்களால் தாக்கப்பட்ட கப்பலில் பணியாற்றிய இலங்கையர் ஒருவருக்கும் காயம்!

ஏடன் வளைகுடாவில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பலிலிருந்து இந்திய போர்க் கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தாவால் மீட்கப்பட்ட 21 பணியாளர்களில் இரண்டு இலங்கையர்களும் உள்ளடங்குவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இலங்கைப் பிரஜைகளில் ஒருவர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக கப்பலிருந்த மூவர் உயிரிழந்தமை தெரிந்ததே.

Exit mobile version