குர்ஆன், ஹதீஸில் அறிவியல் உண்மைகள்.. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமிய கண்காட்சி

திருச்சியில் பழம்பெருமை வாய்ந்த ஜமால் முகமது கல்லூரி‌யில் செயல்பட்டு வரும் அரபுத் துறை சார்பில் “குர்ஆன் ஹதீஸில் உள்ள அறிவியல் உண்மைகள்” என்ற‌ தலைப்பில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய இந்த 2 நாள் கண்காட்சி இன்றும் நடைபெறுகிறது. இதனை ஜமால் முகமது கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் ஏகே காஜா நஜீமுத்தீன் நேற்று திறந்து வைத்தார்.

கல்லூரி பொருளாளர் ஜமால் முகமது, துணைச் செயலாளர் டாக்டர் அப்துல் சமது, உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குனர் அப்துல் காதர் நிஹால், கல்லூரி முதல்வர் டாக்டர் இஸ்மாயீல் முஹைதீன், துணை முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம், அரபுத் துறைத் தலைவர் டாக்டர் முஹம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னை, தஞ்சாவூர், அம்மாபட்டினம், திருநெல்வேலி, மேல்விஷாரம், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கண்காட்சியில் 150 மாணவ, மாணவிகள்

கண்காட்சி ஏற்பாடுகளை அரபுத் துறை தலைவர் முனைவர் முஹம்மது இஸ்மாயில், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அரபுத் துறை பேராசிரியர்கள் முனைவர் அப்துல் ரஷீத், முனைவர் ஷமீம் அன்சாரி, முனைவர் ஜாபர் சாதிக், முஹம்மது அபூபக்கர் சித்தீக், முஹம்மது அப்துல் ரஹீம், அரபுத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்தனர். இந்த கண்காட்சியை பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பார்வையிட்டன.

Exit mobile version