அகங்காரம் மற்றும் ஆணவம் இல்லாமல் தேசத்தின் எதிர்காலத்தை கூட்டாக முன்னெடுப்பது அனைத்து இலங்கையர்களுக்கும் இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மஹா சிவராத்திரியின் தீபங்கள் இந்து சமூகத்தின் உணர்வைப் பற்றவைப்பது போல் அனைத்து இலங்கைப் பிரஜைகளின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்பது ஜனாதிபதியின் விருப்பமாகும்.