கடந்த மூன்று மாதங்களில் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை தந்த யாத்திரிகர்களால் வீசப்பட்ட மூன்று தொன் பிளாஸ்டிக் போத்தல்களை மஸ்கெலியா பிரதேச சபை சேகரித்துள்ளது. யாத்திரிகர்கள் செல்லும் பாதையில் இவ்வாறு வீசியெறியப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அப்புறப்படுத்துவதற்கு தொட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் தெரிவித்தார். .
சில யாத்ரீகர்கள் தொட்டிகளைப் பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுச்சூழலில் விடுவதாக ராஜவீரன் கூறினார்.
ஸ்ரீ பாதத்தில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் நல்லதண்ணியில் உள்ள குப்பை மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் தனியாருக்கு விற்கப்படுவதாக ராஜவீரன் கூறினார்.
தற்போதைய வறண்ட காலநிலை காரணமாக நல்லதண்ணியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண நீர் வழங்கல் சபையுடன் பேசி வருவதாகவும் ராஜவீரன் தெரிவித்தார்.
TIO
