Lover OTT Release: ஓடிடியில் வெளியாகும் லவ்வர்… எப்போ எந்த OTT Platform-ன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரூட்டு போட்டு வலம் வருகிறார் மணிகண்டன். ஸ்க்ரிப்ட் ரைட்டிங் ஒருபக்கம், நடிகராக மறுபக்கம் என மாஸ் காட்டும் மணிகண்டன், கடந்தாண்டு குட் நைட் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் மணிகண்டன் கமிட்டான படங்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

அதன்படி மீண்டும் குட் நைட் டீம் உடன் இணைந்த மணிகண்டன், பிரபுராம் வியாஸ் இயக்கிய லவ்வர் படத்தில் ஹீரோவாக நடித்தார். மணிகண்டன் ஜோடியாக ஸ்ரீ கெளரி ப்ரியா நடித்திருந்த இந்தப் படம், கடந்த மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் லால் சலாம் படத்துக்குப் போட்டியாக வெளியான லவ்வர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், லவ்வர் திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. வழக்கமாக தமிழில் வெளியாகும் படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வந்துவிடும். ஆனால், லவ்வர் படத்துக்கு தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பு இருந்ததால், கொஞ்சம் தாமதமாகவே ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. அதன்படி இந்தப் படம் வரும் 27ம் தேதி டிஸ்னி ப்ளஸ், சிம்பிளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் லவ்வர் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Exit mobile version