ஒருவருக்கே சருமம் வெவ்வேறு நேரங்களில் வேறுவேறு விதமாக இருக்கும். வெயில் காலத்தில் ஒரு மாதிரியும், மழைக்காலத்தில் ஒரு மாதிரியும், பனிக்காலத்தில் ஒரு மாதிரியும் சருமத்தின் தன்மை வேறுபடும்.
அழகாக இருப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் மினுமினுப்பு கொண்ட சருமம் என்றால் எவ்வளவு பெருமிதமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்?
பெரும்பாலானோருக்கு நிச்சயம் அந்த ஆசையும், ஏக்கமும் இருக்கவே செய்யும். ஆனால், அந்த அழகைக் கொண்டு வருவதற்கு ஏராளமான அழகு சாதனங்களைப் பயன்படுத்தத் தேவையே இல்லை. வெறும் மூன்றே பொருள்களில், உங்கள் சருமத்தைப் பளபளக்கச் செய்யும் ரகசியங்கள் சொல்லித் தருகிறார் சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.
CMS பற்றி தெரிந்துகொள்வோம்!
“அழகான சருமம் வேண்டுமென்றால் முதலில் சருமத்தில் இருக்கும் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்க வேண்டும். இதற்கு `க்ளென்சர்’ (Cleanser) பயன்படுத்த வேண்டும். அடுத்தது, சருமம் வறட்சியடையாமல் காக்க `மாய்ஸ்ச் சரைசர்’ (Moisturizer) உபயோகிக்க வேண்டும். மூன்றாவது, `சன்ஸ்கிரீன்’ (Sunscreen). இந்த மூன்றும்தான் சருமப் பராமரிப்பில் அடிப்படை. சருமத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப இந்த மூன்று பொருள்களையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினாலே போதுமானது.