கோட்டையில் ஜன அறகல வியாபரய போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மக்கள் போராட்ட இயக்கத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட இருபத்தி ஒன்பது பேர் (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குழுவில் 02 பிக்குகளும் 03 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், பொருட்களின் விலை உயர்வு மற்றும் அரசாங்கத்தின் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு – கோட்டையை வந்தடைந்தவுடன் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

Exit mobile version