வெப்பமான வானிலை: நீண்ட தூர ஓட்ட நிகழ்வுகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்காக நடத்தப்படும் மாரத்தான் மற்றும் நீண்ட தூர ஸ்பிரிண்ட் போட்டிகளுக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்த புதிய சுற்றறிக்கையை விளையாட்டு மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, மாரத்தான் மற்றும் நீண்ட தூர ஸ்பிரிண்ட் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும்.

மாரத்தான் பந்தயங்களில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க தகுதி பெற, நிகழ்வுகளில் மருத்துவ அறிக்கை மற்றும் ECG அறிக்கையை மருத்துவரிடம் வழங்க வேண்டும்.

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக அண்மையில் பதிவான விளையாட்டு வீரர்களின் துரதிஷ்டவசமான மரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version