தவக்கால சிந்தனை

இன்றைய நற்செய்தியில் மக்களில் சிலர் மிகப்பெரிய இறைவாக்கினராகிய இயேசு இறைவனுக்கு விரோதமான கருத்துக்களை போதித்தார் என்பதற்காக கல்லெறிவதற்காக கற்களை எடுக்கின்றனர்.

எவ்வாறு ஒரு மனிதன் கடவுளின் மகனாக முடியும்? இது முடியவே முடியாது என இயேசுவின் செய்தியும் செயல்களும் யூதத் தலைமைகளையும் அவர்களது அதிகார நிலைகளையும் சவாலுக்குட்படுத்தியது. அவர்களால் இயேசுவின் செயல்களில்

கடவுளின் செயலாற்றலைக் காண முடியவில்லை. அவரை ஓர் ஆபத்தாக நோக்கி அவரைமுடித்துவிட கங்கணம் கட்டினர்.

அவ்வாறே நாமும் நமது கிறிஸ்தவ நம்பிக்கையினை உண்மையாக வாழ்கின்றபோது நமது கருத்துக்களுடன் இணங்கிச் செல்லாதோரைச் சந்திக்க முடியும். அத்தகையோர் நம்மைத் தரக்குறைவாக நடத்தி நமது விழுமியங்களை சவாலுக்குட்படுத்த முடியும். நாம் கடவுளை மறுதலிக்கும் மதிக்கத் தவறும் உலகத்தில் வாழ்கின்றோம். நாமும் மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்யும், அவமானத்திற்குள்ளாக்கும், மரணத்திற்குள் தள்ளும் சமூகத்தில் வாழ்கின்றோம்

சிலரது எதிர்ப்புக்கும் பலரது புறக்கணித்தலுக்கும் மத்தியில் நாம் எவ்வாறு வாழ வேண்டுமென்கிற உயர்ந்த மாதிரியை இயேசு நமக்குத் தருகின்றார்.

எவ்வாறு இயேசு எல்லா மனிதரையும் இரக்கத்துடனும் மன்னிப்புடனும் நடத்தினாரோ அவ்வாறே நாமும் அடுத்தவரை நடத்த வேண்டும்.

அவரது வார்த்தைகள் நமக்கு வாழ்வு தருவதாக அமைகிறது. அவரது துணையுடன் நாம்

விடாமுயற்சியுடன் முன்னேறி ஒரு நாள் அவரது நிலைவாழ்வில் கலந்துகொள்ள முடியும்.

-அருட்தந்தை நவாஜி…”

(திருகோணமலை மறைமாவட்டம்)

Exit mobile version