‘யுக்திய’ நடவடிக்கை: ஒரு வாரத்தில் 63 பாதாள உலக உறுப்பினர்கள் கைது!

குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையில் இலங்கையில் பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடைய 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கைக்காக நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்ட 20 குழுக்களினால் இந்த வருடம் மார்ச் மாதம் 19ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற குற்றங்களுடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேக நபர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

Exit mobile version