எம்.பியை தாக்கிய குற்றச்சாட்டு – பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலா 2,00,000 ரூபாய் சரீரப் பிணையில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பிலிபிட்டிய பிரிவு குற்றவியல் பிரிவு இன்று (22) குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version