நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை காட்டுப் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்ப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சுற்றிவளைப்பில் 50 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்பு, 7 இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், தடயப் பொருட்களையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
