கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் ஈரானுக்கான தனது சில விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தும் காலத்தை நீடித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிப்பதாக ஏர்வேஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கால அட்டவணையின்படி, மார்ச் முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை கட்டார் தலைநகருக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும்.
இந்த நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் ஈரானுக்கான ஏனைய அனைத்து கட்டார் ஏர்வேஸ் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
