அனைவரும் வீட்டிற்வுள் தங்கியிருங்கள், அவசியிமின்றி வெளியில் வரவேண்டாம் என கத்தார் உள்துறை அமைச்சு (MOI) தெரிவித்துள்ளது.
அனைவரும் வீட்டிற்குள் தங்கியிருக்கவும்,
மிகவும் அவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே வெளியே செல்லவும்,
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிடும் அனைத்து உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களையும் முழுமையாகக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு முன் இன்று, கத்தார் அதிகாரிகள் தேசிய அவசர எச்சரிக்கையை மீண்டும் வெளியிட்டு,
அபாய நிலை நீங்கும் வரை பொதுமக்கள் வீட்டிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தங்கியிருந்து,
அவசியமான சந்தர்ப்பங்களைத் தவிர வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
