போர் நிறுத்தம் தொடர்பில் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்..!
எகிப்து, துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போரைத் தணிப்பது மற்றும் பிற பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக மேற்குறித்த நாடுகளுக்கான வெளியுறவு அமைச்சர்கள் இன்று மற்றும் நாளை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கூடுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரானுடனான தனது இணக்கமான உறவுகளின் காரணமாக எந்தவொரு இராஜதந்திர முயற்சிகளிலும் பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகிப்பதோடு, வொஷிங்டனால் முன்மொழியப்பட்ட 15 அமைதி திட்டங்களை தெஹ்ரானிடம் வழங்கியுள்ளது.
