ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை முறியடித்த இஸ்ரேல்

தெற்கு இஸ்ரேலை குறி வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (06) காலை அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் வான்பரப்பில் ஊடுருவிய ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில் எதுவித உயிர்ச்சேதமோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என அல்ஜஸிரா செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version