பஹ்ரைன், சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய 5 நாடுகளும் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என ஈரான் கோரியுள்ளன.
இதுதொடர்பாக, ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜமால் பரேஸ் ஆல்ரோவெயி ஆகியோருக்கு ஈரானின் தூதுவர் மற்றும் நிரந்தர பிரதிநிதி அமீர்-சையது இரவானி கடிதம் எழுதியுள்ளார்.
அவர்களுடைய சர்வதேச ரீதியிலான தவறான செயல்களின் விளைவால் ஏற்பட்ட, ஈரானிலுள்ள அனைத்து பகுதிகளின் பாதிப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வ பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்குவது உள்பட ஈரானுக்கு முழு அளவிலான நஷ்ட ஈட்டை இந்த 5 நாடுகளும் வழங்க வேண்டும் என்றும் இரவானி வலியுறுத்தியுள்ளார்
