கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, வினாடிக்கு சுமார் 130 கன அடி அளவிலான நீர் மகாவலி கங்கைக்குள் வெளியேற்றப்படவுள்ளது.

எனவே, மகாவலி கங்கை மற்றும் அதனை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர், மீன்பிடி மற்றும் நீர்நிலைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version