ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்கனவே பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுள் மூவர் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பில் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கும் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமனிப்பு வழங்கியிருந்தார். அந்த 08 பேரில் நால்வர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். ஏனைய நால்வரில் மூவரே நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மூவரின் விடுதலை தொடர்பிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்பி சபையில் நன்றி தெரிவித்தார்.
ஏனையவர்களையும் விடுதலை செய்வதற்கு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் இதன் போது அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
