பொலனறுவையில் 20% வரையான சிறார்களுக்கு போஷாக்கு குறைபாடு

பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொலனறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது இந்த வயதுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15% – 20% ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

எனவே, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கி அந்தக் குடும்பங்களை மேம்படுத்த வேண்டும் என இதில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version