உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி இன்று (11ஆம் திகதி) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுமி ஒருவரை ஒப்படைத்த இருவர், வைத்தியசாலையில் இருந்து காணாமல் போனதாகவும், சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரில் இருவரால் அழைத்து வரப்பட்ட சிறுமி, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,இதையடுத்து நோயாளியை உடனடியாக கவனித்து தேவையான சிகிச்சையை வழங்க மருத்துவமனை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் .
நோயாளியைப் பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். சுமார் 15 வயதுடைய குறித்த சிறுமியின் முகத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
சிறுமி இறந்ததையடுத்து அவளை அழைத்து வந்தவர்களிடம் விசாரணை நடத்த முற்பட்ட வேளை அவர்கள் அதே காரில் மருத்துவமனை வளாகத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
வைத்தியசாலை வளாகத்தின் பாதுகாப்பு கமரா அமைப்பு பரிசோதிக்கப்பட்டு, உரிய கார் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
