நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று பெண்கள்

சூரியவெவ மஹாவெலிகடஆர ஏரியில் படகு கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

விபத்தின் போது படகில் எட்டு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகில் பயணம் செய்த குழந்தை உட்பட 5 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மூன்று பெண்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version