மத்திய மெக்சிகோவில் மதுபான விடுதி ஒன்றுக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் குறைந்தது ஒன்பது பேரை சுட்டுக் கொன்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவானஜீவாடா மாநிலத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் கடந்த புதன்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒன்பது துப்பாக்கிதாரிகள் மதுபான விடுதியை ஆக்கிரமித்ததாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கான பின்னணி உறுதி செய்யப்படாதபோதும் மெக்சிகோவில் அதிக கொலைச் சம்பவங்கள் பதிவாகும் குவானஜீவாடாவில் இது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் கொல்லப்பட்டிருப்பதோடு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அந்த மதுபான விடுதியின் உரிமையாளர் ஆவார்.
