நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் நாளை !

நாளை (திங்கட்கிழமை) நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் பிற்பகல் 05.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேடமாக விளக்கமளிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் பல பொருளாதார நிபுணர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Exit mobile version