சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

women-newsinfirst

women-newsinfirst

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்தன.

இதற்கமைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1929 என்ற இலக்கத்துக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1938 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யலாம்.

வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version