சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் உதவிச் செயலாளரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலைமையால் சிறுவர்களுக்கு காய்ச்சலினால் வலிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version