கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு

கிராண்ட்பாஸ் நவகம்புரவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘மன்னா கண்ணா’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் கும்பல்களில் ஒருவரான மாரிமுத்து கணேசன் காயமடைந்துள்ளார்.

நவகம்புர வீடமைப்பு வளாகத்தின் இரு வீதியொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

47 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் தந்தை தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மன்னா கன்னா எனத் தெரிவித்த பொலிஸார், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

Exit mobile version