சிறு குழந்தைகளிடையே அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்!

சிறு குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

எனவே, பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்த வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

குழந்தைகளுக்கு நுரையீரல் தொடர்பான நோய் நிலைமையும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சிறார்களுக்கு இன்ப்ளுவென்சாவுக்கு இணையான புதிய நோய் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சிறார்களுக்கு காய்ச்சல், தலைவலி, தடிமன், தும்மல், உடல் வலி, வாந்தி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version