வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவிலின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம் (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது.

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி சப்பரத்திருவிழாவும் மறுநாள் 08ஆம் திகதி தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து, 09ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

Exit mobile version