மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட மட்ட குழு கூட்டம்

தற்போது நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கிராமப் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளையும் கிராமிய புத்தெழுச்சி மையங்களாக அரசாங்கம் அறிவித்து அதன் செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்டான்லி டீமெல் தலைமையில் மாவட்ட மட்ட குழு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்துக் கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் வறுமையிலும், பட்டினியாலும் வாடும் குடும்பங்களை மீட்டெடுக்கும் வழிவகைகள், சிறுவர்களின் போசாக்கு முதல் முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

குறித்த நிகழ்வில் சுகாதார திணைக்கள பணிப்பாளர்,இராணுவ பொறுப்பதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version