ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் 3வது செயலாளர் இன்று (29) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் 3வது செயலாளர், ஓமானில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் .
குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரிடம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இலங்கைப் பெண்கள், சந்தேகநபர் தமக்கு எதிராக தேவையற்ற பாலியல் தொல்லைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
