அரசியலமைப்பு சபைக்கு சாகர காரியவசம் நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபை நிறுவப்பட்டது.

பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்பு சபையாகும்.

10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சபையில் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இருக்கும் அதேவேளையில் சபாநாயகர் சபையின் தலைவர் பதவியை வகிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு பேரவைக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை வேட்பாளராக நியமித்துள்ளார்.

அரசியலமைப்புச் சபையில் ஒரு உறுப்பினரை அரசாங்கத்தின் பெரும்பான்மையான எம்.பி.க்கள் நியமிக்க வேண்டும், அதே சமயம் எதிர்க்கட்சித் தலைவரின் கட்சி மற்றுமொருவரை நியமிக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரின் கட்சியைச் சேராத சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளும் அரசியலமைப்புச் சபைக்கு ஒரு எம்.பி.யை நியமிக்கலாம்.

ஏனைய மூன்று அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து நியமிக்கப்படுவார்கள்.

Exit mobile version