ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், இந்நாட்டிலுள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு ஆங்கில மொழி, தகவல்தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம்,செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி அறிவியலை வழங்குவதற்கான துரித திட்டம் நடைமுறைப்படுத்துவதாகவும், துரித வேலைத்திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் புதிய தொழில்நுட்ப கற்கையை இந்நாட்டு பாடசாலை கட்டமைப்பிற்குள் வியாபிப்பதாகவும்,அந்த பொறுப்பை மற்றவர்களுக்கு வழங்குவதுடன்,அதில் தானும் நேரடியாக தலையிடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு, திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 41 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் பெறுமதியான பாடசாலை பஸ் வண்டியொன்று நேற்று (01) மத்திய கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
