சமுர்த்தி கொடுப்பனவிற்கு தகுதியுடைய பலருக்கு கொடுப்பனவை வழங்க முடியாத நிலை உள்ளதாகவும்,
தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

தகுதியற்ற சிலர் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதில் இருந்து நீக்கப்பட்டால், தகுதியுடையவர்களுக்கு அதனை வழங்கலாம் என்றும் உரையாற்றிய ஜனாதிபதி

கல்வி , மகளிர் , சிறுவர் விவகார அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் பேசுகையில்,
கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வௌியிட்டார்.

2023 ஆம் ஆண்டிலிருந்து 25 வருடங்களுக்கு முன்னோக்கி செல்லக்கூடிய பாடசாலை முறைமை தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version