07 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி!


07 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அண்மையில் கூடிய தேர்தல் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 07 கட்சிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பெயரிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version