எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலை அதிக அளவில் அதிகரிக்கக்கூடும் என அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது முட்டை விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் முட்டை பாவனையினை குறைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சிசிர பியசிரி தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், பண்டிகை காலத்தில் முட்டை வாங்குவதில் நுகர்வோர் அதிக கவனம் செலுத்துவர்.
இந்தநிலையில் முட்டை விலை அதிக அளவில் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முட்டை உட்பட உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக உணவு பாதுகாப்பு தன்மை காரணமாக மக்களிடையே போஷாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலை காரணமாக சிறார்களே அதிக பாதிப்புக்கு உள்ளாவதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதவிர, மின்சார பாவனை கட்டணங்கள், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தொழிலாளர் வேதன அதிகரிப்பு என்பன உணவு பாதுகாப்பை அதிக அளவில் பாதித்துள்ளதாகவும் அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிரி தெரிவித்துள்ளார்.
