நிதி மோசடி குற்றச்சாட்டு – ஜானகி சிறிவர்தன ஒரு வழக்கில் இருந்து விடுதலை!

நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு ஒரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேலும் 3 வழக்குகளில் ஜானகி சிறிவர்தனவினை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version