கிளிநொச்சி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலையங்களால் நடத்தப்படவுள்ள கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இக்கற்கை நெறிகள் மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், கச்சேரி, பளை, நாச்சிக்குடா மற்றும் கண்டாவளை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்படவுள்ளன.

தேசிய தொழில் தகைமை மட்டம் 4 மற்றும் 3க்குரிய கற்கை நெறிகளுக்கே விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினர் தெரிவித்தனர்.

இக்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமக்கு அண்மையிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோட்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version