ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக மரக்கறிகளைப் பயிரிடுங்கள் -உதய கம்மன்பில எம்.பி.

தோட்டங்களில் இயன்றவரை மரக்கறிகள், தானியங்கள் மற்றும் பழவகைகளை வளர்க்குமாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

“இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இது உங்களுக்கும் நாட்டுக்கும் நிம்மதி” என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் நேற்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.நெருக்கடிக்கான காரணங்களுக்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, தீர்வு காண்பதே மிக முக்கியமான பணியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

Exit mobile version