அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் 60 ஆண்டுகளுக்கு முன் பெட்டி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இளம் சிறுவன் யார் என்பதை பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.
“பெட்டிக்குள் இருந்த சிறுவன்” என்று பொதுவாக அழைக்கப்படும் அந்த சிறுவன் ஜோசப் அகஸ்டஸ் செரல்லி என்று அடையாளம் காணப்பட்டுள்ளான்.
மரபணு தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வுப் பணிகளின் உதவியோடு தீர்க்கப்பாடமல் இருந்த வழக்கு ஒன்றில் தீர்வு காணப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அந்த சிறுவனின் பொற்றோரின் பெயரை வெளியிட மறுத்த பொலிஸார் இந்த மரணத்திற்கு யார் காரணம் என்பதையும் கூற மறுத்தனர்.
இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருப்பதாக குறிப்பிட்ட பொலிஸார், சிறுவனின் வாழ்க்கை பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ள உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
1953 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் இந்த சிறுவனின் உடல் 1957 ஆம் ஆண்டு அட்டைப்பெட்டி ஒன்றுக்குள் போர்வையால் சுற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
