பரீட்சையில் மற்றவர்களை பார்த்து எழுதும் மோசடி வேலையை தவிர்ப்பதற்கு பிலிப்பைன்ஸ் மாணவர்கள் பரீட்சையில் அணிந்திருக்கும் விசித்திரமான தொப்பிகள் சமூக ஊடகத்தில் பிரபலமடைந்துள்ளது.
லாகாஸ்பி நகரில் இருக்கும் கல்லூரி ஒன்றே பரீட்சைக்கு மாணவர்களுக்கு மற்றவர்களை பார்க்க முடியாதவாறு தொப்பி அணிந்து வரும்படி அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு பல மாணவகர்களும் அட்டைப்பெட்டி, முட்டைகள் வைக்கும் பெட்டி மற்றும் ஏனைய பொருட்களைக் கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட தொப்பிகளை அணிந்து பரீட்சைக்கு வந்துள்ளனர்.
இந்தத் திட்டம் வெற்றி அளித்திருப்பதாக அந்தக் கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.