நடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்ட தம்புள்ள அவ்ரா அணித் தலைவர் தசுன் ஷானக்கவுக்கு 11 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது போட்டிக் கட்டணத்தின் 40 வீதமாகும்.
ஹம்பாந்தோட்டையில் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு ஸ்டார் அணிக்கு எதிரான லங்கா பிரீமியர் லீக் போட்டியின்போதே அவர் ஒழுக்க மீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தவறை தசுன் ஷானக்க ஒப்புக் கொண்டதை அடுத்தே இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பதோடு 2 தரக்குறைப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.
